கடவுளின் அன்பான பாதுகாப்பு
என் கணவர் ராமுடன் உரையாடி கொண்டிருந்த பொழுது நான் பரிசுத்த ஆவியானவருடைய புனிதமான தருணத்தை பெற்றேன்.
அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார் – ” ஜனங்கள் எப்போதும் பெரிய விபத்துகளில் சிக்குவதால் இமய மலைகளின் குன்றிலிருந்து விழுந்து இறக்க மாட்டார்கள்.
பாதிப்பில்லாதது போல் தோன்றுகின்ற சிறிய கற்களினால் தான் விபத்துகள் நிகழ்கின்றன, அவைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் தடுமாறி, அபாயகரமான விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. அவற்றால் சில நேரங்களில் தவிர்க்க முடியாத பேரிழப்பும் நேரிடலாம்.
இது போன்று தான் நமது வாழ்க்கை பயணத்திலும் பாதிப்பில்லாதது போல் தோன்றுகின்ற சிறிய கற்களை நாம் தவிர்க்க வேண்டியது அவசியமாகும். இதில் ஞானம் விளங்கும்.
நம் வாழ்க்கை பாதையில் நம்மை காக்க இயேசு இன்னும் அதிக உறுதியுடன் இருக்கிறார் என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைவூட்டினார்.
நாம் பாதையைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கிறோம், இயேசுவோ நம்மைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கிறார்!
►நான் பிரகடனப்படுத்தி ஆணையிடுகிறேன், நான் எங்கு சென்றாலும் என்னைப் பாதுகாக்க தேவன் விசேஷித்த உத்தரவுகளோடு தம்முடைய தூதர்களை அனுப்புகிறார் – சங்கீதம் 91:11
► எல்லாத் தீங்குகளிலிருந்தும் தேவனுடைய தூதர்கள் என்னைக் காக்கிறார்கள் – சங்கீதம் 91:11
► என் பாதம் கல்லில் இடறாதபடிக்கு தேவதூதர்கள் என்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். – சங்கீதம் 91:12
► நான் ஒரு வலைக்குள் நடந்து சென்றால், தேவனுடைய தூதர்கள் என்னை தடுமாறாமல் இருக்க வைத்திருக்கிறார்கள் – சங்கீதம் 91:12
► செவிலியர்கள் சிறு குழந்தைகளை கவனமாக அன்புடன் சுமந்து செல்வது போல், இந்த தேவதூதர்கள் என்னை தாங்குவார்கள் – – சங்கீதம் 91:12
► சிறிய விபத்துகளிலிருந்து மிகப்பெரிய தீமைகள் எழக்கூடும் என்பதால், சிறிய தீமைகளிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம் என்பது இறைவனின் ஞானத்தைக் காட்டுகிறது.
► நான் அறிவித்து ஆணையிடுகிறேன், தேவனுடைய ஞானத்தினால் நான் சிறு விபத்துக்கள் மற்றும் சிறிய தீமைகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறேன். – – சங்கீதம் 91:12
நன்றி இயேசுவே உம்முடைய அன்பினால் என்னை பாதுகாத்து, என்னை மீட்டு கொண்டு, என்னை காத்து விடுவிக்கின்றீர். ஆமென்
இந்த தீர்க்கதரிசனம் உங்களை ஆசீர்வதித்திருந்தால், உங்கள் காணிக்கையை அளிக்க கீழே உள்ள “Donate” பட்டனை கிளிக் செய்யுங்கள்!!!
Indian Credit / Debit Cards and Wallets

International PayPal and Credit/Debit Cards
